ஹொங்கொங்கில் மாணவர்கள் வகுப்பறைகளை புறக்கணிப்பு

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இரண்டாம் நிலை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பறைகளை புறக்கணித்துள்ளனர்.

புதிய கல்வி ஆண்டின் முதல் நாளில் 200 இரண்டாம் நிலை பாடசாலைகளின் 10,000 மாணவர்கள் பாடசாலை திரும்பவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்்டுள்ளனர். இரண்டு நாள் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த மாணவர் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வாரம் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் பதிவாகி இருந்தன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் சட்டமன்ற கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும் தீ வைத்தும் தாக்குதல் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் தண்ணீர் பீச்சயடித்தனர். ஹொங்கொங்கில் தற்போது 14 வாரங்களாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை