நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது அன்றும் இன்றும் எனது கொள்கையே

நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பது அன்றும் இன்றும் எனது கொள்கையே-Abolishing Executive Presidency is My Policy-Maithripala

பிரதமரின் தேவைக்கமையவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டும் என்பது அன்று முதல் இன்று வரை தான் பின்பற்றும் அரசியல் கொள்கையாகும் எனத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தது தான் அல்ல பாராளுமன்றமே என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அதற்காக முயற்சிப்பது வேடிக்கையான விடயம் என்றும் தெரிவித்தார்.

நேற்று (21) பிற்பகல் நாவுலவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டத்திற்கான மாநாட்டின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக அண்மையில் கூட்டப்பட்ட அவசர அமைச்சரவைக் கூட்டமானது, தனது தேவைக்காக கூட்டப்பட்டதாக பிரதமரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் அந்த அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தேவைக்கமையவே கூட்டப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Sun, 09/22/2019 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை