ஐ.தே.மு கட்சி தலைவர்களுடன் சஜித் இன்று பேச்சுவார்த்தை

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சித் தலைவர்களுக்குமிடையில் இன்று இரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெறும்.

ஐ.தே.கவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கும், சஜித் பிரேமதாச ஆதரவு தரப்புக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை விசேட சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டதுடன் இணக்கப்பாடின்றியே பேச்சுவார்த்தை முடிந்திருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் பங்காளிக் கட்சிகளை சந்தித்து உங்களை ஜனாதிபதி வேட்பாளராக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களா என அறிந்துக்கொள்ளுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் தான் சஜித் பிரேமதாச இன்று பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஐ.தே.மு. அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களான

 

(3ஆம் பக்க தொடர்)

போக்குவரத்துக்கள் இரு பக்கங்களிலும் நிறுத்தப்படும்.பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை