அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

23 கிராண்ட்சலம் பட்டம் வென்றவரும், அமெரிக்க பகிரங்க பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால்இறுதியில் 18-வது வரிசையில் உள்ள சீன வீராங்கனை வாங்-ஐ எதிர் கொண்டார்.

8-வது வரிசையில் இருக்கும் செரீனாவின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு வாங்-கால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. ஒரு செட்டை மட்டுமே கைப்பற்றினார். இதனால் செரீனா 6--1, 6--0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார். அமெரிக்க பகிரங்க டென்னிசில் செரீனாவின் 100-வது வெற்றி இதுவாகும்.

செரீனா வில்லியம்ஸ் அரை இறுதியில் 5-வது இடத்தில் உள்ள எலீனா சுவிட்டோலினாவை (உக்ரைன்) சந்திக்கிறார். அவர் கால் இறுதியில் 6--4, 6--4 என்ற நேர்செட் கணக்கில் 16-வது இடத்தில் உள்ள ஜோகன்னா கோன்ட்டாவை (இங்கிலாந்து) வீழ்த்தினார்.

Fri, 09/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக