பாராளுமன்றம் நுழைய முற்பட்ட சமுர்த்தி அதிகாரிகள் விரட்டியடிப்பு

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று சமுர்த்தி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களை தடுத்து அங்கிருந்து விரட்டியடித்தனர் 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சமுர்த்தி அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதை ஏற்கெனவே அறிந்திருந்த பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் கலகமடக்கும் பொலிஸாரையும் வரவழைத்திருந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற சுற்றுவட்டச் சந்தியில் நேற்று நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் வீதித்தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  

தண்ணீர் விசிறும் வாகனங்களும் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான சமுர்த்தி அதிகாரிகள் பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் பாராளுமன்ற சுற்றுவட்ட சந்தியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாராளுமன்ற வீதியிலிருந்து தியத உயன பகுதி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.  

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Sat, 09/21/2019 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை