கட்டுகெலியாவ அல்- அக்‌ஷா அணி வெற்றி

அல்- -இம்ரான் விளையாட்டுக்கழகம் மூன்றாவது வருடமாக நடாத்திய AICL கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இம்மாதம் 01 ஆம் திகதி உடநிந்திகம பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இவ்வருடம் அல் - -அக்ஸா விளையாட்டுக்கழகம் அல்- இம்ரான் சம்பியன் கிண்ணத்தையும் , ரூபா அறுபதாயிரம் பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டதுடன், இரண்டாம் இடத்தைப் பெற்ற உடநிந்திகம அல் - இம்ரான் அணிக்கு வெற்றிக் கிண்ணமும்,ரூபா முப்பதாயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதேசத்திலுள்ள 40 பிரபல கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டதுடன்,இறுதிப் போட்டியில் போட்டியிட கட்டுகெலியாவ அல்-- அக்‌ஷா அணியும், உடநிந்திகம அல்- -இம்ரான் அணியும் தகுதி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அல்- இம்ரான் அணி 05 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றனர்.

மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அல்- -இம்ரான் அணியின் டில்சான் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கட்டுக்கெலியாவ அல் - அக்ஸா அணியினர் 3.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றனர். இத்தொடரின் சிறந்த ஆட்டக்காரராக அல்- -இம்ரான் அணியின் டில்சான் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக அல்-- அக்ஸா அணியின் பந்து வீச்சாளர் அஜ்ஹர் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த சகலதுறை ஆட்டக்காரரக அல்- -அக்ஸா அணியின் ரவ்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.

(கல்நேவ தினகரன் விசேட நிருபர்)

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை