பூம்ராவின் ஹட்ரிக் விக்கெட்டால் மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்

ஜமைக்கா நகரில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்தியா ஆரம்ப வீரர்கள் மயங்க் அகர்வால், அணித்தலைவர் விராட் கோஹ்லி, இஷாந்த் சர்மா ஆகியோர் அரை சதமும், ஹனுமன் விஹாரி சதமடிக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 461 ஓட்டங்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்து வீசிய பும்ரா ஹட்ரிக் விக்கெட்டுடன் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹட்ரிக் விக்கெட் எடுத்த பும்ரா. பிராவோ, ஷமாரா புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக சாய்த்தார்.

இதன்மூலம் இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், இர்பான் பதானை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை