பொதுஜன பெரமுனவுடன் இணைவதா? தனித்து போட்டியிடுவதா?

சு.க மத்திய குழுவில் இன்று முடிவு  

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்று (30) ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்பட இருப்பதாக சுதந்திரக் கட்சி பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​போட்டியிடாவிட்டால் யாரை களமிறக்குவது என இது வரை மாற்று வேட்பாளர் ஒருவர் குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று கூறிய அவர்,இந்த வாரத்தில் முக்கிய பலசுற்று பேச்சுக்கள் கட்சிக்குள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் நிலைமைகள் குறித்து அவசரமாக ஆராய மத்திய குழு இன்று (30) இரவு 7.30மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடுகிறது.சு.க---- -_ பொதுஜன பெரமுன இடையிலான பேச்சுவார்த்தை, இணைந்து செயற்படும் சாத்தியம், சு.க வேட்பாளர் உட்பட முக்கிய விடயங்கள் இதன்போது ஆராயப்பட இருக்கின்றன. சு.க- _ பொது ஜன பெரமுன இணைவது தொடர்பில் கட்சிக்குள் மாற்றுக் கருத்துகளும் இருக்கின்றன. அது தொடர்பிலும் மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும்.

சு.க தனித்துப் போட்டியிடுவதற்கு தேவையான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சு.க சார்பில் போட்டியிட வேண்டும் என மத்திய குழு கோரியுள்ளது. ஆனால் இது தொடர்பில் ஜனாதிபதி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.(பா)

Mon, 09/30/2019 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை