பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி

 'உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய- பசுபிக் மாறியுள்ளதாகவும் இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதால் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் முதலீடு செய்வதற்கு எமது தொழில்துறையினரை அழைப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

'லங்காபெக் '; (Lankapak) சர்வதேச கண்காட்சி தொடரின் 38 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் (14) நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்தூ,திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி இராஜங்க அமைச்சர் புத்திக்க பத்திரன,ஆசிய பொதியிடல் துறை கூட்டமைப்பின் தலைவர் ரோஹன் விக்டோரியா,இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக பிரதிநிதி ராகேஷ் ஷாங்கிராய்,மற்றும் இலங்கை பொதியிடல் துறை நிறுவனத்தின் தலைவர் அனுராதா ஜெயசின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள மிக முக்கியமான தொழில் கண்காட்சிகளில் ஒன்றான 'லங்காபெக் ' தொடரை வர்த்தக வாணிப அமைச்சு ஆதரித்துள்ளதுடன், ஐந்து பொதியிடல்துறைகளான- பொதியிடல் செயலாக்கம், அச்சிடுதல், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

'பொதியிடல் , செயலாக்கம், அச்சிடுதல், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பற்றிய கொழும்பின் 38 ஆவது சர்வதேச தொழில் கண்காட்சி சமீபத்திய காலங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய தொழில் விநியோக பதிவினை ஈட்டியுள்ளது. உலகளாவிய சில்லறை ஈ-கொமர்ஸ் பொதியிடலில்

முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புக்களைத் திறக்கிறது- குறிப்பாக சர்வதேச சந்தைகளில் நுழைய விரும்பும் எங்கள் பொதியிடல் தொழில்துறையினருக்கு பாரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை