உதய சூரியன் விளையாட்டு கழகம் சம்பியன்

அக்கரைப்பற்று சூசிற்றி விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக் கழகம் 'அதாஉல்லா வெற்றிக் கிண்ணம் 2019' ஐ தனதாக்கிக் கொண்டது.

மேயர் அகமட் ஸக்கியின் அனுசரணையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டி அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் புகழ்மிக்க 8 உதைபந்தாட்ட விளையாட்டுக் கழகங்கள் இச் சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டன. இப்போட்டியின் அரை இறுதிச் சுற்றில் திருக்கோவில் விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று சூ சிற்றி விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டதில் உதய சூரியன் விளையாட்டுக் கழகம் 4க்கு 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றுமொரு அரை இறுதிப் போட்டியில் சம்மாந்துறை ஸ்பார்ட்னஸ் விளையாட்டுக் கழகத்துடன், அட்டாளைச்சேனை சோபர் கழகம் விளையாடியதில், சம்மாந்துறை ஸ்பார்டனஸ் கழகம் 2க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதியானது.

இறுதிப் போட்டியானது இரவு(22) சம்மாந்துறை ஸ்பார்ட்னசுக்கும், திருக்கோவில் உதய சூரியனுக்குமிடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் உதய சூரியன் அணியினர் 3க்கு பூச்சியம் என்ற கணக்கில் கோல்களைப் புகுத்தி அதாஉல்லா வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக திருக்கோவில் உதய சூரியன் அணியைச் சேர்ந்த ரீ.சங்கர் தெரிவானார்.

இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை