வெங்கலச்செட்டிகுளத்தில் அறநெறிக்கல்வி கொடி தினம்

தேசிய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு,நேற்று வவுனியா வெங்கலச் செட்டி குளம் பிரதேச செயலகத்தில் இந்துசமய அறநெறிக் கல்வி கொடி தினம் நடைபெற்றது.

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்தை உணர்த்தும் பொருட்டு செப்டம்பர் 01 முதல் 30 வரை இந்தக்கொடி தினம் கொண்டாடப்படுகிறது.

“பூரணத்துவமான ஆளுமைப் பண்புக்கு அடிப்படை அறநெறிக் கல்வியே! ” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் இக்கொடி தினம் கொண்டாடப் படுகிறது.இதனை முன்னிட்டு வெங்கலச்செட்டி குளம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த ஊர்வலம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரதேச செயலகம் வரைச் சென்றது. அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த ஊர்வலம் இடம்பெற்றது. நந்தி கொடியேற்றும் நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் கை.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது. இதனைத் தொடந்து அறநெறி கீதம் இசைக்கப் பட்டதுடன்,அறநெறி கல்வியின் முக்கியத்துவம் பற்றி பிரதேச செயலாளர் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் முகுந்தன் திட்டமிடல் பணிப்பாளர்எஸ்.சண்முகநாதன் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு, கலாசார உத்தியோகத்தர் ரா.பிறிஸ்கா அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய பரிபாலன சபையினரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோவில்குளம் குறூப் நிருபர்

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை