அரிதான மூளை தின்னும் தொற்றால் சிறுமி மரணம்

மூளை தின்னும் அமீபா எனும் ஒற்றை உயிரணுவால் 10 வயதுச் சிறுமி கடந்த திங்களன்று மரணமடைந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் பொர்ட் வர்த் நகரில் நடந்தது. இம்மாத முற்பாதியில், லில்லி மே அவென்ட் என்ற அந்த சிறுமி நதியில் நீந்தச் சென்று வாரத்திற்குப் பின்னர் அவர் தலைவலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்டார். நாளுக்கு நாள் உடல் நலம் மோசமடைந்ததால் லில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைத் தொற்று இருப்பது தெரியவந்தது. ஒரு வாரமாக, உயிருக்குப் போராடிய லில்லி பின்னர் உயிரிழந்தார்.

இவ்வகைத் தொற்று ஏற்படுவது மிகவும் அரிது என்று அதிகாரிகள் கூறினர்.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை