அக்கரைப்பற்றில் விழிப்பூட்டல் நிகழ்வு

சமுதாய சீர்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு நற்பிரஜைகளாக வாழ்வதற்கு ஊக்குவிக்கப்பட்டவர்களுக்கான விழிப்பூட்டல் மற்றும் அறிவூட்டல் நிகழ்வு ஒன்று இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அக்கரைப்பற்று நிலையத்தால் அப்பிரதேசத்தில் உள்ள சுவாட் நிறுவனத்தின்  கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் அக்கரைப்பற்று நிலைய சட்ட உத்தியோகத்தர் சட்டத்தரணி எல். கலைவாசனா தலைமையில் அவரின் சக உத்தியோகத்தர்களான பி. எம். கலாமுத்தின், எஸ். பிரகலா ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்களான ஜி. சரளா, ஏ. எல். நிஸ்பா ஆகியோர் பங்கேற்றதுடன் சட்டத்தரணி எம். எச். எம். எச். நுஸ்தி, சமுதாய சீர்திருத்த அதிகாரி எம். எஸ். எம். இக்றாம், அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்பதிகாரி இ. ஹாலித் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

சட்டங்களை மதித்து நடத்தல், சிறந்த எதிர்கால வாழ்க்கையை கட்டி எழுப்புதல் ஆகியன குறித்து வளவாளர்களால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக போதை பொருள் பாவனை அற்ற வாழ்க்கை முறை குறித்து உபதேசிக்கப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வின் பயனாளிகளும், அவர்களை போன்றவர்களும் சமுதாயத்தில் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு முயற்சிகள் குறித்தும் ஆராயப்பட்டன.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Sun, 09/29/2019 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை