கோட்டாவுக்கு எதிராக மீண்டும் வழக்ைகத் தொடர முடியும்

ஆவணங்கள் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படாமையே காரணம்

எவன் கார்ட் வழக்கு தீர்ப்பு, தொலைபேசி உரையாடல் மற்றும் உரிய முறையில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமை என்பவற்றுக்கு இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

திட்டமிட்டே இந்த விடயங்கள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜெயமஹ தெரிவித்தார்.

இது தொடர்பில் முழுமையான

விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்த அவர் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் தில்ருக்‌ஷி டயஸ் பிரதிவாதி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியது முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.

உரிய முறையில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததாலே கோட்டபய அடங்கலான பிரதிவாதிகள் விடுக்கப்பட்டுள்ளனர்.

எவன்கார்ட் மோசடியுடன் தொடர்புள்ள கோட்டபய,நிஸ்ஸங்க சேனாதிபதி அடங்கலான பிரதிவாதிகளுக்கு எதிராக உரிய முறையில் வழக்கு தொடரமுடியும் எனவும் அதற்கு எந்த தடையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உட்பட சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிலர் துள்ளிக் குதிக்கின்றனர். ஆனால் ஆவணங்கள் உரிய முறையில் (தொழில்நுட்ப தவறு) சமர்ப்பிக்கப்படாதது தொடர்பில் பூர்வாங்க எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்களின் அனுமதி கடிதம் இன்றி ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக பிரதிவாதிகள் தரப்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

தீர்ப்புடன் தொடர்புபட்டதாக நீதவான் குறிப்பொன்றையும் எழுதியுள்ளதோடு சரியான முறையில் மீள வழக்கு தொடரமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இவர்களுக்கு எதிராக மீள வழக்குத் தொடர்வதில் எந்த தடையும் கிடையாது.

தில்ருக்‌ஷி டயஸ் ஏன் இவ்வாறான தவறை செய்தார் என்பது தொடர்பில் பாரிய சிக்கல் உள்ளது.தனது பொறுப்பை அவர் தவறியுள்ளார்.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை