தம்பலகாமத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர், மின்சார இணைப்பு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இலவச குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக்கான பத்திரம் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (02) இடம்பெற்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவாவினால் வழங்கி வைக்கப்பட்டன .

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கள் 60 பேருக்கும், மின்சார இணைப்புக்கள் 80 பேருக்குமாக 140 இணைப்புக்கள் இதன் போது வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சதாமியா கிராம அபிவிருத்திச் சங்கம், அல் ஹிஜ்ரா கிராம அபிவிருத்தி சங்கம் ஆகிய இரு சங்கங்களுக்கான தளபாடங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் தம்பலகாம பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் மற்றும் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி , ஆர்.எம்.றஜீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர்களான நஜீபுள்ளா, ஏ.சீ.நஜிமுதீன், ஆபிலூன், ஆசிக் உள்ளிட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

திருமலை மாவட்ட விசேட,முள்ளிப்பொத்தான தினகரன்,கந்தளாய் தினகரன் நிருபர்கள்

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை