இலங்கை திரைப்படங்கள் மூன்றின் இறுவெட்டு வெளியீடு

இலங்கை இந்திய திரைப்பட இயக்குநர் சம்மாந்துறை ஏ.ஆர்.எம் ரசீன் தயாரித்த மூன்று திறைப்படங்களின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு திங்கட்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கீறல்கள், 2015 இல் வட்டி, எண் 303 என்ற சினிமா திறைப்படங்களில் உள்ளூர் கவிஞர்கள், பாடகர்கள், இசை அமைப்பாளா்கள் இயற்றிய 13 பாடல்கள் அடங்கிய இருவெட்டுக்களே கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வைத்து ஏ.ஆர்.எம் ரசீன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கலந்து கொண்டு முதல் இருவெட்டினை கலாநிதி அப்துல் கையூமிடம் கையளித்தார். இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவு உதவிப் பணிப்பாளர் யக்கூப், கவிஞர் மன்சுர், ஏ காதர், வாசு ஆகியோரும் உரையாற்றினர்.இப் படத்தில் நடித்த நடிகைகள், நடிகர்கள், இசையமைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய அசாத் சாலி,

உள்ளூர் திரைப்படங்களையோ அல்லது இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்கு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமோ, ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனமோ அல்லது வசந்தம் தொலைக்காட்சியோ முக்கியத்துவம் அளித்து இந்த படங்களை வாங்கவில்லை. இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டுவந்து விலை கொடுத்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன் என அசாத் சாலி அங்கு தெரிவித்தார். இந்திய மற்றும் மேலைத்தேய படங்களை விலை கொடுத்து அன்னிய கலாசாரத்தினை மக்களுக்கு புகுத்தாமல் இந்த நாட்டில் உள்ள கலைஞர்கள், சினிமாத்துறையினருக்கு கைகொடுத்து இத்துறையை வளர்ப்பதற்கு ஏ.ஆர்.எம் ரசீன் 3 வருடத்திற்குள் 3 படங்களை இலங்கையிலும் இந்தியாவிலும் தயாரித்துள்ளதை இட்டு அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அத்துடன் இந்தத் திரைப்படங்களில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு இந்தியா சினிமாத்துறையிலும் வாய்ப்புக் கிட்டியதாகவும் திறைப்பட இயக்குனர் ரசீம் கூறினார்.

அஸ்ரப் ஏ சமத்

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை