கோஷ்டி பூசலால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகல்

கோஷ்டி பூசலால் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை ஊர்மிளா மடோன்கர், கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்ற அவர் அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகுவதாக ஊர்மிளா அறிவித்துள்ளார்.

திடீர் விலகலுக்கான முழுமையான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளின் மீதுள்ள அதிருப்தி காரணமாகவே ஊர்மிளா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காங்கிரசில் கோஷ்டி பூசல் அரசியலே அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், மும்பை காங்கிரசில் ஒரு பெரிய குறிக்கோளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக கோஷ்டி பூசல் அரசியலுக்கு எதிராக போராட வேண்டி உள்ளது. சொந்த நலனுக்காக காங்கிரசை பயன்படுத்த எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் மறுக்கின்றன என்று கூறினார்.

அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபத்தின் நெருங்கிய உதவியாளர்களை விமர்சித்த தனது கடிதம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இராஜினாமா குறித்த எண்ணம் தனக்கு வந்ததாக" ஊர்மிளா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை