பொதுஜன பெரமுன முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

ஸஹ்ரானுடன் முழு முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி பேசியது தொடர்பில் பொதுஜன பெரமுன சகல முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ஐ.தே.க கூறியுள்ளது.

ஸஹ்ரானுக்கு மட்டுமன்றி பொட்டு அம்மானுக்கும் பணம் வழங்கியதாக மொட்டுக் கட்சி பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருக்கிறார்.

இது அவரின் கருத்தன்றி மஹிந்த ராஜபக்‌ஷவினதும்

குரலாகும் என்றும் ஐ.தே.க குற்றஞ்சாட்டியுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் பிரதி அமைச்சர் நளின் பண்டார ஜெயமஹ,பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிரி மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள்.

பிரதி அமைச்சர் நளின் பண்டார இது தொடர்பில் கூறுகையில்,

ஸஹ்ரானுக்கும் பொட்டு அம்மானுக்கும் பணம் கொடுத்ததாக கெஹெலிய ரம்புக்வெல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.இந்த கூற்றை சரிசெய்வதற்காக மறுநாள் ஊடக மாநாடு நடத்திய அவர் தான் ஸஹ்ரான் என்று கூறியது முழு முஸ்லிம் சமூகத்தையும் என்று அதனை விட பாராதூரமான கருத்தை சொல்லியிருக்கிறார்.

250 பொதுமக்களை கொலை செய்து நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திய பயங்கரவாதியை முழு முஸ்லிம் சமூகத்துடனும் ஒப்பிட்டு கூறியது பாராதூரமானதாகும்.இது முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதாகும். அவர் மொட்டு கட்சியின் பேச்சாளர்.அவர் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் கோட்டாவினதும் குரலாகத் தான் இதனை கூறியிருக்கிறார்.இது தொடர்பில் இவர்கள் முழு முஸ்லிம்களிடம் மட்டுமன்றி முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்.3,4 பேர் செய்த தவறுக்கு முழு முஸ்லிம்களின் மீதும் பழி சுமத்துவதை ஏற்க முடியாது என்றார்.

முஜீபுர் ரஹ்மான் எம்.பி கூறுகையில்,

கோட்டாபயவினால் தான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என மொட்டு கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாக்களிக்குமாறு இவர்கள் கோருகின்றனர். ஆனால் பயங்கரவாத செயற்பாடுகள்,இனவாதம் மதவாதம் என்பவற்றுக்கு இந்த குழு தான் உதவி வருகிறது.ஸஹ்ரானை விட 10 மடங்கு அதிக அழிவுகளை பொட்டு அம்மான் செய்துள்ளார். புலனாய்வு பிரதானியாக அவர் கொலைகளை திட்டமிட்டு செயற்படுத்தினார். இவர்களுக்குத்தான் மொட்டு கட்சியினர் பணம் கொடுத்துள்ளனர்.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை