முல்லை. மேலதிக அரச அதிபராக பிரதீபன் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றிய மருதலிங்கம் பிரதீபன் 9-.9-.2019 முதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கடமையாற்றி வருகின்றார்.

2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்று உத்தியோகத்தரான மருதலிங்கம் பிரதீபன் 2004-ம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உதவி திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பணிப்பாளராக கடமையாற்றி 2010 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கோப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.

தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு முதல் 2019-.9-.8 வரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.

மாங்குளம் குறுப் நிருபர்

Sat, 09/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை