பிர்லியன்ட் கழகத்திற்கு நிதி உதவி

கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் திட்ட முகாமையாளருமான எஸ்.எம்.தாஹிர் ரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். குறித்த நிதியினை ரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டுக் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 05ம் திகதி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

பிரதேச விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், விளையாட்டுக் கழகங்களையும் விளையாட்டும் வீரர்களையும் ஊக்குவிப்பதனூடாக போதை மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள், தவறான வழிகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க முடியுமென கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் திட்ட முகாமையாளருமான எஸ்.எம்.தாஹிர் தெரிவித்தார்.

 (வாழைச்சேனை விசேட நிருபர்)

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை