யாழ்ப்பாண பல்கலையில் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு தனி பிரிவு

அமைச்சர் விஜயகலா உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை எனும் தனியான பிரிவை ஆரம்பிக்கும் முயற்சியில் உலகத் தமிழ்  பண்பாட்டு இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் இயக்கத்தின் அகிலத் தலைவர் வி. சு. துரைராஜா கையளித்தார்.

மிகவும் தொன்மையான தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைகள் மற்றும் கலாசார விழுமியங்கள் தொடர்பான பாடநெறி ஒன்றை ஆரம்பித்து வளர்ந்து வரும் மாணவர்களுக்கு அது தெளிவாக கற்பிக்கப்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தலைவர் துரைராஜா அமைச்சரிடம் தெரிவித்தார்.

இக் கருத்தை வரவேற்ற அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அண்மையில் தனது முயற்சியினால் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீக துறைக்கு தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டது என்றும் இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் மிக விரைவில் இது தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து இந்த பணியை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

மேலும் தமிழ் பண்பாட்டுத்துறை சார்பான பிரிவுக்கு யாழ். மட்டுவில் மகாவித்தியாலய கட்டிடத்தை யாழ். பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவந்து தமிழ் பண்பாட்டுத்துறை பிரிவு மாணவர்களின் பாவனைக்கு இடமளிக்க முடியும் என இயக்கத்தின் தலைவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு அது தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை