ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்ததன் உள் நோக்கம் என்ன? நாட்டுக்கு அறிவிப்பது அவசியம்

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளில் 200 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி முழு உலகுக்கும் பகிரங்கமாக தெரிவித்திருப்பதன் உள்நோக்கம் என்னவென்பதை அறிந்துகொள்வது அவசியமென பொதுஜன பெரமுன தெரிவித்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பந்துல குணவர்தன எம். பி. சுயாதீன ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்து இரண்டு வாரங்களுக்குள் அதன் அறிக்கையைப் பெற்று இதன் உண்மை நிலையை நாட்டுக்கு அறிவிப்பது அவசியம் எனவும் கேட்டுக் கொண்டார்.

தாமரைக் கோபுர நிர்மாணப்பணிகளின் போது 200 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக

 

ஜனாதிபதி கூறியமை தொடர்பில் நேற்றைய தினம் ஆளும் கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் பலரும் பல்வேறுகருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கிணங்க நேற்றையை தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே பந்துல குணவர்தன எம். பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்: 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிர்மாண நடவடிக்கைகள் 2015இல் முடிவுற வேண்டியதாகும். எனினும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதும் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

ஒருவாறு நாலரை வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு தற்போது அது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை