பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி தோல்வி

லா லிகா தொடருக்கு முன்னேற்றம் கண்ட கிரனடா அணி நடப்புச் சம்பியன் பார்சிலோனாவை 2–0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்தத் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது.

இந்த முடிவுடன் பார்சிலோனா கடந்த 25 ஆண்டுகளில் லா லிகாவில் தனது மோசமான ஆரம்பத்தை பெற்றுள்ளது. பார்சிலோனா இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2 இல் மாத்திரமே வென்று 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தனது சொந்த மைதானமான லொஸ் கர்மனஸில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே ரமோன் அசீஸ் குறுகிய தூரத்தில் இருந்து தலையால் முட்டி கோல் ஒன்றை பெற்று பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

உபாதையில் இருந்து மீண்டிருக்கும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்புவதற்கு போராடும் நிலையில் இரண்டாவது பாதியில் இந்த பருவத்தில் முதல்முறை மைதனாத்திற்கு திரும்பினார்.

எவ்வாறாயினும் பெனால்டி பகுதியில் பார்சிலோனா மத்தியகள வீரர் ஆர்டுரோ விடாலின் கைகளில் பந்து பட்டதை அடுத்து கிடைத்த பெனால்டி கிக்கை அல்வாரோ வெடிலோ கோலாக மாற்றி 66 ஆவது நிமிடத்தில் கிரனடாவை 2–0 என முன்னிலை பெறச் செய்தார்.

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை