ஓட்டமாவடியில் நவீன உடற்பயிற்சி நிலையம்

இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட Gold Fitness Center உடற்பயிற்சி நிலையம் கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஐ.டி.அஸ்மி தலைமையில் 20.09.2019 வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,கௌரவ அதிதிகளாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கோறளைப்பற்று கௌரவ தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், பிரதேசசெயலாளர் எம்.எஸ். நிஹாரா மௌஜுத், உதவி திட்டமிடல் பணிப்பளார் எச்.எம்.எம் றுவைத் மற்றும் அதிதிகளாக வைத்தியர் அப்தாப் அலி, பிரதேசசபை கௌரவ உறுப்பினர்களான ஏ.நௌபர், ஏ.ஜி. அமீர், வி.யோகேஸ்வரன், எம்.பி. ஜௌபர், ஏ.எல். ஜெஸ்மின் பீவி, எம்.பி. ஜேமீலா, முன்னால் தவிசாளர் ஹமீட், பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எ.அக்பர், அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.இல்யாஸ் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெரமுன மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

எமது பிரதேசத்தில் காணப்படும் இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு குறித்த உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களிடத்தில் காணப்படும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் அதிகளவான நோய்கள் ஏற்படுவதனையும், தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக சிறந்த உடற்பயிற்சி இன்மையும் விளையாட்டில் ஆர்வம் இன்மையும் ஆகும்.

இவற்றினை நிவர்த்தி செய்து இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தினை சிறந்த முறையில் பேணவும், எமது பிரதேசத்தில் அதிகளவு பரவி காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுபடுத்துவதற்கும், அளவான உணவு பழக்கம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நேர்த்தியான உடற்பயிற்சியினுடாக உடல் வலிமையினை பெற்று நோயற்ற வாழ்வினை வாழ்வதற்கு குறித்த உடற்பயிற்சி நிலையம் இன்றியமையாததாகும்.

வாழைச்சேனை விசேட நிருபர்

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை