மாகாண மட்டத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் சமபோஷ

சிபிஎல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபுட்ஸ் (பிரைவட்) லிமிடெட்,தேசத்தின் புகழ்பெற்ற சீரியல் வர்த்தக நாமமாக 'சமபோஷ' திகழ்கின்றது. இளம் மெய்வல்லுநர்களின் திறமைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு சமபோஷ பாடசாலை விளையாட்டு நிகழ்வை சமபோஷ ஏற்பாடு செய்திருந்தது.

சோளம், அரிசி, சோயா மற்றும் பயறு ஆகிய நான்கு தானியங்களைக் கொண்டு உள்நாட்டில் தயாரிக்கப்படும் சமபோஷ,உயர் தரம் வாய்ந்ததாகவும், உள்நாட்டு விவசாயிகளுக்கு வலுவூட்டி, உற்பத்தி செய்யப்படுகின்றது.

அண்மையில் பூர்த்தியடைந்த சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் பாடசாலை விளையாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருந்தது. தொழில்நுட்பம், அறிவு மற்றும் போஷாக்கு ஆகியவற்றை வழங்கி சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்த வழிகோலியிருந்தது.

முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்ற சமபோஷ பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு மாகாணங்களில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், முழு நாட்டுக்கும் விஸ்தரிக்கும் இலக்குடன்,இந்த ஆண்டின் சமபோஷ பாடசாலை விளையாட்டுக்கள் நான்கு மாகாணங்களில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஜுலை மாதம் முழுவதிலும், ஊவா, வட மத்திய, கிழக்கு, மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களை உள்வாங்கி இந்த பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இப்பிராந்தியங்களைச் சேர்ந்த மெய்வல்லுநர்களுக்கு புதிய அனுபவங்களை பெற்றுக் கொடுத்திருந்தது.

ஒவ்வொரு மாகாண மட்டத்திலும் மொத்தமாக 116 போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இதில் 1000க்கும் அதிகமான பாடசாலைகள் பங்கேற்றிருந்தன. இவற்றிலிருந்து 10000 இளம் மெய்வல்லுநர்கள் கலந்து கொண்டனர். வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கு சமபோஷ சம்பியன்ஷிப் கேடயங்கள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.

நிறைவடைந்த பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக மாகாண கல்வி அதிகாரிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததுடன், நாட்டின் பிள்ளைகளுக்கு சமபோஷ முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்கி, அதனூடாக தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்கியிருந்ததுடன், தமது நம்பிக்கையை கட்டியெழுப்பவும் பங்களிப்பு வழங்கியிருந்தது. தேசிய மட்டத்தில் இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றமைக்காக நிறுவனத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக CBL Food Cluster சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் ஜயங்க பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,'சமபல காலை உணவு வேளையின் முக்கியத்துவத்தை சமபோஷ எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதுடன், அதனூடாக எதிர்கால தலைமுறையை செழுமை மிக்கதாக கட்டியெழுப்புவது பற்றியும் கவனம் செலுத்துகின்றது. சமபோஷ முன்னெடுத்திருந்த 'காலை ஆகார வேளை மிக முக்கியம்' எனும் விழிப்புணர்வுத் திட்டத்தினூடாக, சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு காலை ஆகார வேளையின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டிருந்தது. மேலும், எமது புதிய ஊக்குவிப்புத் திட்டமான 'காலை உணவு ஹீரோ' என்பதனூடாக, சிறுவர்கள் செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்பதுடன், செழுமையான வாழ்க்கையை முன்னெடுப்பதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம். சமபோஷ உற்பத்திக்கு உயர் தரம் வாய்ந்த மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு, இந்த மாகாணங்களில் காணப்படும் சமூகத்தார் பற்றியும் நாம் கவனம் செலுத்துகின்றோம். 10000க்கும் அதிகமான விவசாயிகள் எமக்கு பங்களிப்பு வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தாருக்கு நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக நாம் உதவிகளை வழங்குகின்றோம்.' என்றார்.

தேசிய நடவடிக்கை தொடர்பில் பிளென்டி ஃபுட்ஸ் பிரைவட் லிமிடெட் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,'எமது விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, செழுமை மற்றும் வலிமை ஆகியவற்றுக்கு மேலதிகமாக அர்ப்பணிப்பு, பொறுமை, சுய நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் ஆகியன முக்கிய குணவியல்புகளாக அமைந்துள்ளன. விளையாட்டில் மதிப்பு மிக்க நபர்கள் வளர்ந்து வருகின்றனர். ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, நாம் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டித் தொடர், மலைநாடு மற்றும் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் இராணுவ மெய்வல்லுநர் போட்டிகள் போன்றவற்றை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்கின்றோம். அத்துடன், எமது விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறன்களை சர்வதேச மட்டத்துக்கு நிகராக தரமுயர்த்தும் வகையில் எமது பொறுப்பை தொடர்ந்து பேணி வருகின்றோம்.' என்றார்.

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை