நிரந்தர காவலாளி நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டம்

கோணாவில் வித்தியாலயம்

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு நிரந்தர காவலாளி ஒருவரை நியமிக்குமாறு கோரியும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நேற்யை தினம் காலை இப் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து நீதி கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அண்மையில் பாடசாலையின் அதிபர் அலுவலகம் உடைத்து எரியூட்டப்பட்டிருந்தது. இதனால் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆவணங்கள் உட்பட பெரும்பலான ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே விரைவில் அதற்கான தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோர்களும் குறிப்பிட்டனர். அத்துடன் இப் பாடசாலைக்கு என நிரந்தரமாக காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதன்போது போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கமலராஜன் வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி இப் பிரச்சினைக்கு தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாக கூறினார். இதனையடுத்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை