கந்தளாய் பிரதேச செயலக அணி சம்பியன்

11ஆவது திருகோணமலை அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணம்

11ஆவது திருகோணமலை மாவட்ட. அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் பிரதேச செயலக அணி வெற்றியீட்டி சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டு வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலக அணியும், திருகோணமலை மாவட்ட செயலக அணியுமாக மொத்தம் 12 அணிகள் பங்குகொண்ட அணிக்குப் 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது வழமை போன்று இம் முறை மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா தலைமையில் 31 ஆம் திகதி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கந்தளாய் பிரதேச செயலக அணியும், மொறவெவ பிரதேச செயலக அணியும் இவ் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்

இறுதிச்சுற்றுக்குத்தெரிவாகின. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மொறவெவ பிரதேச செயலக அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது .

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கந்தளாய் பிரதேச செயலக அணி 6 விக்கட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை குவித்தது. மொறவெவ பிரதேச செயலக அணியை தோற்கடித்து சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது

மொறவெவ பிரதேச செயலக அணியானது இரண்டாவது இடத்துக்கு தெரிவானது.

வெற்றியீட்டி சம்பியனாகிய கந்தளாய் பிரதேச செயலக அணியினருக்கான வெற்றிக்கிண்ணத்தினையும் பதக்கங்களினையும் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா வழங்கி கௌரவித்தார்.

இதில் திறமை காட்டிய ஏனையோருக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

2020 ஆண்டுக்கான. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணம் வெருகலில் நடைபெறவுள்ளது .

இந் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கினால் மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசாவுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அனேக பிரமுகர்களும் மைதானம் நிறைந்த பார்வையாளர்களும் ஏராளமான ரசிகர்களும் இங்கு குழுமியிருந்தனர்.

( தோப்பூர் தினகரன் நிருபர் )

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை