வெளிநாடுகளில் ஆரம்ப கல்விக்கு மாத்திரமே அரசு உதவி செய்கிறது

கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா

கிழக்கு மாகாணத்தின் "அயல் பாடசாலை -சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா திறந்து வைத்தார்.

கந்தளாய் வலயக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட ஐயந்திபுர வித்தியாலயத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தினையே நேற்று (09) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா கலந்து கொண்டு உரையாற்றுகையில், தான் 24 நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், இதில் இலங்கையிலேயே ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர்தரம் வரை இலவச கல்வி வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் ஆரம்ப கல்வியை கற்பதற்கு மாத்திரமே அரசு உதவி செய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகளுக்காகவே வாழ்கின்றார்கள். சிறார்களின் நலனுக்காக, அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்கு 5,535 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் 84 பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜீ. முத்துபண்டா தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் 2,240 பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி. முத்துபண்டா, பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை