மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் ம.வி பாடசாலையில் 20 மில்லியன் ரூபா செலவில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.இதற்கான அடிக்கல் நேற்று முன்தினம் (03) நடப்பட்டது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்.
கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுத்தீன் இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் என்.முஜாஹிர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர், பாடசாலை நிருவாகத்தினர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் குறூப் நிருபர்-
from tkn