புதுக்குடியிருப்பில் 8 கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு

புதுக்குடியிருப்பில் 8 கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு-8 Claymore and Detonators-Explosives Found at Mullaitivu Puthukkudiyiruppu

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் சுதந்திரபுரம் பகுதியில் 8 கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (29) சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பில் 8 கிளைமோர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு-8 Claymore and Detonators-Explosives Found at Mullaitivu Puthukkudiyiruppu

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிசார், குறித்த இடத்தில் காணப்பட் 8 கிளைமோர் குண்டுகளையும் சுமார் 60 டெட்டனேட்டர்களையும் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை செயலிழக்கச் செய்து அங்கிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

(மாங்குளம் குரூப் நிருபர் - எஸ். தவசீலன்)

Sun, 09/29/2019 - 18:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை