விசேட தேவையுடைய 7 மாணவர்கள், 14 போட்டி நிகழ்ச்சிகளில் தேசிய மட்டத்துக்கு தெரிவு

மூதூர் அல் -ஹிதாயா மஹா வித்தியாலயம் சாதனை

கிழக்கு மாகாண மட்டப் பாடசாலைகளிடையே நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் மூதூர் கல்வி வலயத்திலுள்ள மூதூர் அல்- ஹிதாயா மஹா வித்தியாலய மாணவர்கள் 8 முதலாம் இடங்களையும், 6 இரண்டாம் இடங்களையும் பெற்று 14. போட்டி நிகழ்ச்சிகளில் தேசிய மட்டப்போட்டிகளுக்குத்தெரிவாகி சாதனைகளை நிலை நாட்டி பாடசாலைக்கும் மூதூர் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ் விசேட தேவையுடைய மாணவர்களுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப்போட்டி 05 ஆந் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மூதூர் அல் -ஹிதாயா மஹா வித்தியாலயத்தில் விசேட கல்விப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களான.

எம்.எஸ்.எம்.தஸ்னீம்.18வயதுப் பிரிவின் கீழ் 100 மீற்றர், ஓட்டம் 75 மீற்றர் ஓட்டம் நின்ற நிலையில் பாய்தல் ஆகிய மூன்று போட்டி நிகழ்ச்சிகளில் முதலாம் இடங்களைப்பெற்று சாதனைகளை நிலைநாட்டி தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எஸ்.எம்.மன்சிப் 20 வயதின் கீழ் நீளம் பாய்தல், குண்டு போடுதல் 100 மீற்றர் ஓட்டம் ஆகிய மூன்றூ நிகழ்ச்சிகளிலும் மாகாண மட்டத்தில் முதலாம் இடங்களை பெற்று வெற்றிபெற்று தேசிய மட்டப்போட்டிக்கும் தெரிவாகியுள்ளார். எஸ்.எம்.ஜவாத் 22 வயதின் கீழ், 100 மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் மாகாண மட்டத்தில் முதலாம் இடங்களையும், குண்டுபோடுதல் நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏ.அல் கைராத் என்ற மாணவன் 14 வயதுப்பிரிவின் கீழ் தட்டை சேகரித்தல் நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செயௌயப்பட்டுள்ளார்.

ஐ.றுஸ்தி அஹமட் 20 வயதுப்பிரிவின் கீழ் சமநிலையில் நடத்தல் நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளதோடு தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். பீ.எம்.சல்மான் 14 வயது பிரிவின் கீழ் நீளம் பாய்தல் நிகழ்ச்சியிலும், குண்டுபோடுதல் நிகழ்ச்சியிலும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடங்களைப்பெற்று தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆர்.றிஸ்னி 18 வயது பிரிவின் கீழ் 75 மீற்றர் ஓட்டத்தில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

( தோப்பூர் தினகரன் நிருபர் )

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை