6 ஆவது இலங்கை உணவு பதனிடுவோர் சங்க வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி : கம்ம பிட்ஸா கிராப்ட் அணி சம்பியன்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை உணவு பதனிடுவோர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 07 ஆம் திகதி நடைபெற்றது. SLFPA கேடயத்தை வென்றெடுக்கவென, 23 அங்கத்துவ நிறுவனங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக மொத்தம் 37 அணிகள் இதில் போட்டியிட்டன. லீக் அடிப்படையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது. பங்குபற்றிய அங்கத்துவ நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் உச்சகட்ட இடைத்தாக்கம் மற்றும் தோழமை என்பனவற்றை பங்குபற்றிய அங்கத்துவ நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பேருதவியாக இருந்தது.

பங்குபற்றிய நிறுவனங்களின் குழுக்கள், பதனிடப்பட்ட உணவு வகைகள், பதனிடப்பட்ட மென்பானங்கள், இயந்திர சாதனங்களும் பொதி செய்தலும், சர்வதேச உணவுச் சான்றிதழ், உணவு மூலப்பொருட்கள், சிற்றுண்டி வகைகள் போன்ற பிரிவுகளில் கலந்து கொண்டன. பதனிடப்பட்ட உணவு வகைகள் தொழிலில் ஈடுபட்ட சகல அங்கத்தவர்களுக்கும் இந்த சுற்றுப் போட்டி முக்கியமான ஒரு நிகழ்வாக இருந்தது. குதூகலம் மற்றும் விளையாட்டு வீரர் தகைமை என்பனவற்றுடன், பல்வேறு அமைப்புக்களில் இருந்தும் விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்த முடிந்துள்ளது. விளையாட்டுக் குழுக்களின் குடும்பத்தினரும் இந்த வருட நிகழ்ச்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

பிட்ஸா கிராப்ட் லங்கா ஏ - குழுவின் வெற்றிக் கிண்ணத்தையும், பிலென்டி பூட்ஸ் (தனியார்) குழு இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. வெற்றிப் பதக்கத்தை, கம்ம பிட்ஸ் கிராப்ட் லங்காவின் டீ குழு வென்றெடுத்துள்ளது. போட்டியின் வெற்றியாளருக்குரிய விருது கம்ம பிட்ஸா கிராப்ட் லங்கா நிறுவனத்தைச் சேர்ந்த மலித் டி சில்வாவுக்கும், விளையாட்டுப் போட்டியின் வெற்றி வீராங்கனைக்குரிய விருது கம்ம பிட்ஸா கிராப்ட் லங்கா நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி அருணி தேஜசிங்கவுக்கும் வழங்கப்பட்டன. பங்குபற்றியவர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தவென போட்டியின் ஒழுங்கமைப்பாளர்கள் கரையோக் போட்டியையும் ஒழுங்கு செய்திருந்தனர். சி டி. டீ பொன்சேகா நிறுவனத்தைச் சேர்ந்த நந்துனி ஷர்மிலா சிறந்த நர்த்தகியாகத் தெரிவு செய்யப்பட்ட அதேசமயத்தில், சிறந்த பாடகருக்குரிய விருதை கார்கில்ஸ் குவாலிற்றி உணவு வகைகள் நிறுவனத்தைச் சேர்ந்த ஜிஹான் பிரேமசிரி பெற்றுக் கொண்டார். சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்ட கூடத்திற்குரிய பரிசு எஸ்.ஏ.சில்வா அன்ட் சன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த வருட ஒழுங்கமைப்பாளர்களாக லங்கா எக்ஸிபிஷன் அன்ட் கொன்பிரன்ஸ் சேர்விசர் நிறுவனம், SMAK, யூனியன் பாங்க் பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, சன்குயிக், நெஸ்லே லங்கா, யூனிலிவர் ஸ்ரீலங்கா, சி.டி டி பொன்சேகா அன்ட் சன்ஸ், CMC எஞ்ஜினியரிங் எக்ஸ்போட் GMBH, கொன்றோல் யூனியன் ஸ்ரீலங்கா, கொக்கா கோலா மென்பானங்கள், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், கார்கில்ஸ் குவாலிற்றி பூட்ஸ் மற்றும் கம்ம பிட்ஸா கிராப்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை