அமரர் பண்டாரநாயக்கவின் 60ஆவது நினைவுதின நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 60ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று முற்பகல் ஹொரகொல்ல பண்டாரநாயக்கவின் சமாதியில் நடைபெற்றது.

பிக்குகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் ஆகிய ஐம்பெரும் சக்திகளை ஒன்றிணைத்து இலங்கையின் அரசியல் பயணத்தை முக்கிய திருப்புமுனைக்குள்ளாக்கியவர் பண்டாரநாயக்க.

அத்துடன் இணைந்ததாக நேற்று உலகின் முதலாவது பெண் பிரதமராகிய அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் அமரர் அநுர பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வுகளும் நடைபெற்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்க ஆகியோர் முதலில் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தொடர்ந்து ஜனாதிபதி சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, ஏ.எச்.எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, சரத் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை