இஸ்ரேலில் 5 மாதங்களில் 2ஆவது பொதுத் தேர்தல்

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெறும் இரண்டாவது பொதுத் தேர்தலில் மக்கள் நேற்று வாக்களித்தனர்.

கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலுக்கு பின் கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி அடைந்ததை அடுத்தே முன்கூட்டிய தேர்தலுக்கு பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அழைப்பு விடுத்தார்.

இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகளின்படி பிரதமரின் வலதுசாரி லிகுட் கட்சி மற்றும் பிரதான போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி பென்னி காட்சின் தலைமையிலான மையவாத நீலம் மற்றும் வெள்ளை கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இறுதி முடிவில் சிறு கட்சிகள் தீர்க்கமான பாத்திரம் ஏற்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்கெடுப்புகள் முடிவுற்று ஆரம்பக் கட்ட முடிவுகள் வெளியான விரைவிலேயே கூட்்டணி அரசு ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய தேர்தலில் 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் லிகுட் மற்றும் நீலம் மற்றும் வெள்ளை கட்சிகள் தலா 35 இடங்களை கைப்பற்றின. எனினும் தமக்கு சிறிய வலதுசாரி மற்றும் மதவாதக் கட்சிகளின் ஆதரவு இருப்பதால் அந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றியை அறிவித்தார். எனினும் பல வாரங்கள் நீடித்த ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இஸ்ரேலிய வாக்காளர்களின் 68 வீதமான 5.88 மில்லியன் பேர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்களாவர். எனினும் கிழக்கு ஜெரூசலம், மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் வசிக்கும் 4.8 மில்லியன் பலஸ்தீனர்கள் வாக்களிக்க தகுதியில்லை.

ஆனால் வாக்காளர்களில் 20 வீதமானவர்கள் இஸ்ரேலின் பலஸ்தீன பிரஜைகளாக உள்ளனர். இந்த 950,000 வாக்காளர்களும் இந்தத் தேர்தலில் தீர்க்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு அரசு கட்சிகளை சூழ்ந்து இந்த வாக்குகள் தங்கியுள்ளன. கடந்த முறை தேர்தலில் இந்தக் கட்சிகள் இரண்டாக பிளவுபட்டதால் வாக்குகள் சிதறின. இம்முறை இவை ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் இஸ்ரேல் நேரப்படி நேற்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை