அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு 44 வெற்றிகள்

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

கிழக்கு மாகாண விஷேட தேவை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிநிகழ்வுகளில், அக்கரைப்பற்று கல்வி வலய மாணவர்கள் பங்குபற்றி 24முதலாமிடங்கள், 13 இரண்டாமிடங்கள், 07 மூன்றாமிடங்கள் என மொத்தம் 44வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்வி மற்றும் விஷேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். ஜஹ்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விஷேட தேவை மாணவர்களுக்கான விளையாட்டு விழா, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி. எஸ்.வரதசீலன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில், அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம். உதயகுமார் பிரதம அதிதியாகவும், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜீ.ஆர். நந்தசேன, மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் வி. மயில்வாகனம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயம், அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயம், ஒலுவில் தெற்கு பாத்திமா வித்தியாலயம், பொத்துவில் அல்-ஹிதாயா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 34 விஷேட தேவையுடைய மாணவர்கள் 60 போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு இவ்வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

Sat, 09/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை