மெக்சிகோ கிணறொன்றில் 44 சடலங்கள் கண்டுபிடிப்பு

மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கிணறொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 44 சடலங்களை தடயவியல் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

குவடலஜரா நகருக்கு வெளியில் கண்டுடிக்கப்பட்ட இந்த மனித எச்சங்கள் 119 கறுப்புப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. துர்நாற்றம் பற்றி குடியிருப்பாளர்கள் முறையிட்டதை அடுத்தே ஒருசில தினங்களுக்கு முன் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

போதைக் கடத்தல் கும்பல்களின் வன்முறைகள் அதிகமுள்ள பகுதியாக ஜலிகோ நகர் உள்ளதோடு, இங்கு பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இதில் பெரும்பாலான உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருப்பதால் அவைகளை ஒன்றிணைத்து அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. இதனால் பல உடல் பாகங்களும் இன்னும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன.

இவைகளை அடையாளம் காண மேலும் நிபுணர்களின் உதவியை அரசிடம் தேடுதல் குழுவினர் கேட்டுள்ளனர். இதனை பூர்த்தி செய்வதற்கு போதுமான நிபுணர்கள் தம்மிடம் இல்லை என்று உள்ளுர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை