உலகில் 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை

உலகில் 40 விநாடிகளுக்கு ஒருமுறை ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

போரில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை விடத் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று அது குறிப்பிட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறனர்.

இந்த எண்ணிக்கை அண்மைக் காலமாக உலகளவில் குறைந்துவந்தாலும், சில நாடுகளில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

2010 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் தற்கொலைகளின் எண்ணிக்கை 6 வீதம் அதிகரித்துள்ளது.

தற்கொலை தவிர்க்கக்கூடியது என்றும் மக்களிடையே தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெரும்பாலான தற்கொலைகள் குறைந்த, மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன. இலங்கை, லிதுவேனியா, லெசோதோ, உகாண்டா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அதிக தற்கொலை சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இங்கு 1 இலட்சம் பேருக்கு 13.7 வீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அதே நேரத்தில் பங்காளதேஷ், சீனா, லெகோதோ, மொராக்கோ மற்றும் மியான்மரில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆவர்.

இவர்களில் இளம் வயதினர் அதிக அளவில் உள்ளனர். மொத்தத்தில் தற்கொலை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 45 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை