கிழக்கு மாகாணத்துக்கு கராத்தே போட்டியில் தங்கம் உட்பட 4 பதக்கங்கள்

பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற 45 வது தேசிய விளையாட்டு விழாவின் தனியாள் கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் தொடர்ச்சியாக ஆறாவது தடவையாகவும் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளார். கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கராத்தே போட்டியில் தொடர்ந்தேச்சியாக 3 தங்கப்பதக்கங்களை சுவீகரித்திருக்கிறார்,

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6 தடவைகள் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கங்கள் வென்றதுடன் 3 தடவைகள் சிறப்பு விருதினையும் பெற்று எமது நாட்டுக்கும், மாகாணத்துக்கும் பெருமை சேர்த்த சாதனை வீரராவார். இவருடைய தங்கப் பதக்கத்துடன் மேலும் மூன்று வெண்கலப் பதக்கம் குழு நிலை கராத்தே போட்டியில்

(Karathe Team kata) கிழக்கு மாகாணத்துக்குக் தற்போது கிடைத்திருக்கின்றது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த சரோன் சஜின் மற்றும் சராஜ் முகமட் ஆகியோரும் ஆலையடிவேம்பைச் சேர்ந்த திஸோப்பன் என்பவருமே வெண்கலப் பதக்கத்தை வென்றவர்களாவர்

இது குறித்து கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நெளபீஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த வீரர்கள் கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடித் தந்திருக்கிகிறார்கள். இதற்காக இவர்களை வாழ்த்துகிறேன்.

தற்போது, பொலநறுவையில் நடைபெற்ற கராத்தே போட்டியைப் போன்று வேறு பல போட்டிகளிலும் பதக்கம் பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த அவர், ஒக்ேடாபர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையும் பதுளையில் நடைபெறவுள்ள இறுதி விளையாட்டு விழாவில் பதங்களை வெல்லக் கூடிய திறமையான வீரர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சாதனையாளரான பாலு ராஜின் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ரூபா 30,000 க்கு மேற்பட்ட கராத்தே கிட், கையுறை மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்கள் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் இதே போன்று கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்கு நாங்கள் பல்வேறு உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிண்ணியா மத்திய நிருபர்

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை