4ஆவது SLT Speed-Up சைக்கிள் சவாரி கொழும்பில்

இலங்கை சைக்கிள் சம்மேளனத் தலைவர் என். கருணாரத்னவுக்கு SLT தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன கிண்ணத்தை கையளிக்கிறார்.

பெரிதும் அறியப்பட்ட SLT Speed-Up சைக்கிள் சவாரி போட்டிகள் வெற்றிகரமாக 4ஆவது முறையாக 2019 இம்மாதம் 24 தொடக்கம் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதை தேசத்தின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தீர்வு வழங்குநரும் முன்னணி பிரோட்பாண்ட் மற்றும் உட்கட்டமைப்பு வழங்குநருமான ஸ்ரீலங்கா டெலிகொம் பெருமையுடன் அறிவிக்கிறது. நாட்டில் சைக்கிள் தொடர்பான விளையாட்டு செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த தேசிய சைக்கிள் பந்தயம் 2016 இல் முதல் முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. BMICH இல் அண்மையில் இடம்பெற்ற 'ஜனாதிபதி விளையாட்டு விருதுகள்' நிகழ்வில் இந்த ஆண்டு சவாரி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை சைக்கிள் பந்தய வரலாற்றில் முதல் முறையாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக இந்த ஆண்டில் சைக்கிளோட்ட வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க ஸ்ரீலங்கா டெலிகொம் திட்டமிட்டுள்ளது. ஆடவர்களின் பந்தயம், மகளிர்களின் பந்தயம் மற்றும் சிறுவர்களின் பந்தயம் என பிரிவுகளில் இம்முறை சைக்கிள் சவாரிய போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக பாடசலை மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகளை நடத்துவதன் மூலம் இலங்கையின் சைக்கிளோட்ட பயணத்தில் இந்த சைக்கிள் பந்தயம் மற்றொரு முக்கிய மைல்கல்லை பதிவு செய்யவுள்ளது. இம் மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் இந்த சைக்கிள் பந்தயம் 5 நாட்கள் சிறந்த விளையாட்டு அனுபவத்தை தந்து 1000 கிலோ மீற்றர்களை உள்ளடக்கியதாக இம் மாதம் 28 ஆம் திகதி தம்புள்ளையில் முடிவடையவுள்ளது.

இலங்கையில் சைக்கிள் சம்பியன்சிப் ஒன்றுக்கு வழங்கப்படும் அதிக பரிசுத் தொகையான ஆடவர்களின் போட்டி வெற்றியாளருக்கு 1 மில்லியன் ரூபா பரிசுடன் SLT Speed-Up சைக்கிள் சவாரி போட்டி முடிவடையும்.

இந்த நிறுவனத்தின் மூலம் நாட்டிற்கு அதிவேக பிரோட்பாண்ட் வலையமைப்பை வழங்குவதை விளக்குவதாக SLT Speed தொனிப்பொருள் உள்ளது. மிக நிலையானதும் முதல் நிலையானதுமான SLT விளையாட்டு செயற்பாடுகளுக்கு அதிவேக தீர்வுகளுடன் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை தொடர்புபடுத்துவதற்கு “Speed-Up” என்ற தொனிப்பொருளை கவனமாக தேர்வுசெய்திருப்பதோடு, அது நாட்டின் அனைத்து பக்கங்களையும் தனது அடைவை விரிவுபடுத்துகிறது. SLT பிரோட்பாண்ட் நாடெங்கும் விரிவுபட்டிருப்பதன் குறியீடாக இந்த பந்தயம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளக்கி இருப்பது சிறந்த அடையாளமாகும்.

ஸ்மார்ட் பிரஜைகளாக தமது வாழ்வை மாற்றுவதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு இணையாக SLT மூலம் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மோட்டார் விளையாட்டுகள் மற்றும் மிக வெற்றிகரமான karting challenge பந்தயங்களை நடத்துவதன் மூலம் SLT Speed Up தொனிப்பொருளை நிறுவனமானது இந்த ஆண்டு மேலும் விரிவுபடுத்துகிறது.

Smart Sri Lanka வுக்காக நாட்டை இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு பாரிய பங்களிப்புச் செய்வதற்கு நிறுவனமானது நடவடிக்கை எடுத்திருப்பதோடு இவ்வாறான நிகழ்ச்சிகள் அந்த நோக்கத்திற்கு புது ஒளியை தருவதாக உள்ளது.

 

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை