கொங்கோ நாட்டில் படகு மூழ்கி 34 பேர் மாயம்

கொங்கோ நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 34 பேர் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஏரிகள் மற்றும் ஆறுகளில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் படகு ஒன்றே மூழ்கியுள்ளது. இதில் 76 பயணிகள் காப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொங்கோ நாட்டு தலைநகர் கின்ஷாசாவில் இருந்து மாய் டொம்பே மாகாணத்தை நோக்கி இந்த படகு பயணத்திக்கொண்டிருந்தது. இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படாதபோதும் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

அதிக பயணிகளை ஏற்றுச் செல்வது மற்றும் பயன்படுத்த பொருத்தமில்லாத படகுகள் காரணமாக கொங்கோ நாட்டில் படகு விபத்துகள் வழக்கமான ஒன்றாக உள்ளது.

கொங்கோ நாட்டின் வீதி கட்டமைப்பு மோசமாக இருக்கும் நிலையில் படகுச் சேவைகள் அங்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை