சுற்றுலா படகில் தீ விபத்து: உயிரிழப்பு 34 ஆக உயர்வு

கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பற்றி எரிந்ததில் மாயமானவர்களை தேடும் பணி கைவிடப்பட்டதையடுத்து தீவிபத்தில் 34 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியா அருகே சான்டாகுரூஸ் தீவில் ஆழ்கடல் நீச்சல் செய்வதற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6 பேருடன் சுற்றுலாப் பயணிகள் 33 பேர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவர்கள் படகு நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரியத் ஆம்பித்தது.

அதில் சிக்கி அதிகமானோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படகின் மேல்தளத்தில் படுத்திருந்த ஊழியர்கள் 5 பேர் மட்டும் கடலில் குதித்து சிறிய படகில் தஞ்சமடைந்தனர். மீதமுள்ள 34 பேரில் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 முதல் 6 பேர் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60 அடி ஆழத்தில் கடலில் மூழ்கியுள்ள படகில் இருக்கும் உடல்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை