தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம்

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம்-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

உண்ணா விரதம் ஆரம்பித்த நாள் இன்று

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 32வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று (15) யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நினைவுகள் ஆரம்பமானது.

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம்-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

பொதுச் சுடரினை மாவீரர்லெப்டினன் தேவானந்தனின்  தாயார்  திருமதி ச. ஏகநாதன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் தியாக சுடரேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சொலமன் சூ சிறில், செ. செல்வராஜா, மாவீரர்களின் உறவுகள், உணர்வாளர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம்-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாமல் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிரிழந்தார்.

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம்-Thileepan's 32nd Remembrance-Nallur-Jaffna

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா, யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், நிதர்சன் வினோத்)

Sun, 09/15/2019 - 11:51

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை