புர்கினா பாசோவில் இருவேறு தாக்குதல்களில் 29 பேர் பலி

புர்கினா பாசோவின் பதற்றம் கொண்ட வடக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரு தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் பொருட்கள் மற்றும் மக்களை அழைத்துச் செல்லும் வாகனம் ஒன்று குண்டு தாக்குதலுக்கு இலக்கானதில் குறைந்தது 15 பயணிகள் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் வியாபாரிகளே பெரும்பாலும் பலியாகியுள்ளனர்.

அதேநேரம் 50 கிலோமீற்றருக்கு அப்பால் மோதலில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகன தொடரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் அதிக வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ 2015 தொடக்கம் இஸ்லாமியவாத குழுவுடன் சண்டையிட்டு வருகிறது.

அண்டை நாடான மாலியை பூர்வீகமாகக் கொண்ட இந்த போராட்டக் குழுக்கள் நாட்டின் வடக்கில் தோன்றி தற்போது கிழக்கை நோக்கி பரவி வருகின்றன.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை