பிரேசில்–கொலம்பிய ஆட்டம் 2–2 என சமநிலையில் முடிவு

கொலம்பியா மற்றும் பிரேசில் இடையில் நடைபெற்ற நட்புறவு ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மியாமியில் 65, 232 பார்வையாளர்கள் குழுமியிருந்த ஹாட்ர் ரொக் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரு அணிகள் இடையிலான நட்புறவு ஆட்டம் நடைபெற்றது. நட்சத்திர வீரர் நெய்மர் நீண்ட நாட்கள் கழித்து பிரேசில் அணியில் இடம் பெற்றார்.

ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் நெய்மர் கடத்தி தந்த பந்தை அற்புதமாக கோலாக்கினார் கஸ்மீரா.

அதன் பின் எழுச்சி பெற்ற கொலம்பியா வீரர்கள் லுௗயிஸ் மரியல், ரோஜர் மார்டினஸ் அபாரமாக கோலடித்து 2–1 என முன்னிலை பெற்றுத் தந்தனர்.

அதன் பின் 58 ஆவது நிமிடத்தில் நெய்மர் அபாரமாக ஆடி கோலடித்தார். இதனால் ஆட்டம் 2–2 என சமனில் முடிந்தது. அடுத்த ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகளும், கொலம்பியா மற்றும் வெனிசுவேலாவும் மோதுகின்றன.

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை