கஜபா சுப்பர் குரொஸ் 2019 இல் கார், மோட்டார் சைக்கிள் சம்பியன்களாக சியெட் அணி தெரிவு

கடந்த ஞாயிற்றுக்கிழமை 1ஆம் திகதியன்று இடம்பெற்ற கஜபா சுப்பர் குரொஸ் போட்டியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சியெட் ரேசிங் அணி, 2019ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஷிப் கெளரவத்தைப் பெற்றுக்கொள்வதற்கானவாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளது. அநுராதபுரத்திலுள்ள சாலியபுர சுற்றுவட்டத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அணியின் திறமைவாய்ந்தமோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களான ஜக்ஸ் குணவர்தன,எவொன் குருசிங்க ஆகியோர் அற்புதமான ஓட்டத்தைவெளிப்படுத்தி, குழு MX 250 cc, FO M STD/MOD 250cc

கார் பந்தயங்களில்,சியெட் ரேசிங் சாரதியான உஷான் பெரேரா,SL GT – Cars up to 3500cc ஒட்டுமொத்தமாக,சியெட் ரேசிங் அணியைச் சேர்ந்தஅங்கத்தவர்கள், இந்நிகழ்வில் முதல் மூன்று இடங்களை 9 தடவைகள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வானது இலங்கை இராணுவத்தின் கஜபாபடைப்பிரிவால், இலங்கை ஓட்டோஸ்போர்ட் சாரதிகள் சங்கத்தின் துணையுடன் நடத்தப்படுகிறது. இலங்கை இராணுவத்தின் புதியதளபதியும் கஜபா படைப்பிரிவின் கேணலுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

2019ஆம் ஆண்டின் சியெட் ரேசிங் அணியானது சியெட் சீருடையுடன் கலந்துகொள்கிறது. இவ்வணியில் உபுல்வான் சேரசிங்க, அஷான் பெரேரா,மாலிககுருவித்தாராச்சி,டெவின் சேரசிங்க,சமொட் பெரேரா, கேணல் துமிந்த ஜயசிங்க,கேணல் இந்து சமரக்கோன், சமொட் சமரக்கோன் ஆகியசாரதிகளும் எவொன் பியகீகுரசிங்க, ஜக்ஸ் குணவர்தனஆகியமோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்கு கின்றனர்.

சியெட் நிறுவனமானதுசியெட் இலங்கை ஓட்டோமொபைல் சாரதிகள் சங்கம் 2019 சம்பியன்ஷிப் தொடரின் பிரதானஅனுசரணையாளராகச் செயற்படுகிறது. இவ்வாண்டின் தொடரானது ஐந்து பந்தயங்களின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கவுள்ளது. கஜபாசுப்பர் குரொஸ்,கண்ணர்ஸ் சுப்பர் குரொஸ்,சீகிரியரலிகுரொஸ்,கட்டுகுருந்தமோட்டார்குரொஸ், ஃபொக்ஸ் ஹில் சுப்பர் குரொஸ் ஆகியனவேஅந்தஐந்துதொடர்களாகும். இவற்றில் ஃபொக்ஸ் ஹில் போட்டியில் அனைத்துமோட்டார் ஓட்டக் குழுக்களும் பங்குபற்றுவதோடு,விளையாட்டுத்துறைஅமைச்சால் முகாமைசெய்யப்படுகிறது.

மோட்டார் பந்தயப் போட்டிகளில் நாட்டில் முதன்மைவகிக்கும் வருடாந்தத் தொடருக்காக 10ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் பிரதான அனுசரணையை வழங்குவதோடு மாத்திரமல்லாமல், இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வணிகக்குறியானசியெட்,அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஸ்ரீ லங்கா ஓட்டோ மொபைல் ஸ்போர்ட்ஸ் அமைப்பால் அனுமதியளிக்கப்பட்ட “வண் மேக்” என்ற தொடருக்கும் ஆதரவளிக்கவுள்ளது. டார்மக் வாகன ஓட்டங்களாக அமையவுள்ள இத்தொடரில் சியெட் வாகன டயர்களையே போட்டியாளர்கள் பயன்படுத்தவுள்ளனர்.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை