2008 இல் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சென்று அங்கிருந்து வந்த 2 இலங்கையர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்த இருவர் கைது-2 suspects with Sri Lanka bound vessel held by Navy

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த இருவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) மன்னார், உருமலை பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

தலைமன்னார், உருமலை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்த வட மத்திய கடற்படை பிரிவு கடற்படை வீரர்கள், அது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த படகுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட என தெரிய வந்துள்ளது.

அதற்கமைய, குறித்த படகிலிருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, குறித்த சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்து இங்கு குடியே முயற்சிக்கும் நபர்கள என, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இந்நபர்கள் இருவரும் கடந்த 2008இல் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் எனவும் தெரிய வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரிய பண்டார தெரிவித்தார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும், தலைமன்னாரில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் “தம்மென்னா” விற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த படகை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

Sun, 09/29/2019 - 19:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை