2001 புகைப்படத்திற்காக கனடா பிரதமர் மன்னிப்பு

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழுப்புநிறத்தில் முக ஒப்பனை செய்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

2001இல் ட்ரூடோ ஆசிரியரகப் பணிபுரிந்தபோது அந்தப் படம் எடுக்கப்பட்டது. டைம்ஸ் சஞ்சிகை அது குறித்து அண்மையில் தகவல் வெளியிட்டது.

ஆண்டிறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அரேபியன் நைட்’ நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்துகொண்டிருந்தார். அப்போது அல்லாவுதீன் கதாபாத்திரத்தைப் போன்று வேடமிட்டிருந்த அவர் முகத்தில் பழுப்பு நிற ஒப்பனையைச் செய்திருந்தார்.

அந்தப் படம் மற்ற இனத்தவரின் மனதைப் புண்படுத்தக்கூடியது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் படம் எடுத்தபோது அதனைத் தாம் உணரவில்லை என்று கூறிய ட்ரூடோ அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி அங்கு தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இந்த புகைப்படம் பெரும் விவாதத்தை அங்கு கிளப்பி உள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகளும் இந்த தேர்தலானது ஜஸ்டினுக்கு கடினமான ஒன்றாக இருக்குமென்றே தெரிவிக்கின்றன.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை