அமெரிக்காவில் மருத்துவரின் வீட்டில் 2000 கரு எச்சங்கள்

அமெரிக்காவில் காலமான மருத்துவரின் வீட்டில் 2,000க்கும் மேலான கருக்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் உல்ரிக் குலோபர் செப்டம்பர் 3 அன்று உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய வீட்டைச் சுத்தம் செய்த குடும்பத்தினர் அந்தச் சடலங்களைக் கண்டுபிடித்தனர்.
குலோபர் இண்டியானாவில் மருந்தகம் வைத்திருந்தார். அதில் அவர் கருச்சிதைவு சிகிச்சைகளைச் செய்து வந்தார்.

13 வயது இளம் பெண்ணுக்குக் கருச்சிதைவு சிகிச்சை செய்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்காததாலும் சிகிச்சைகளின்போது ஊழியர்களை உடன் வைத்துக்கொள்ளத் தவறியதாலும் 2016இல் அவருடைய மருத்துவ உரிமம் மீட்டுக்கொள்ளப்பாட்டது. 43 ஆண்டுகளில் ஒரு மரணம் கூட ஏற்படுத்தாமல் அனைத்து கருச்சிதைவுகளையும் வெற்றிகரமாகத் தாம் செய்ததாக குலோபர் முன்பு கூறியிருக்கிறார்.

அவருடைய வீட்டில் மொத்தம் 2,246 கருக்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை