20க்கு 20 கிரிக்கெட்; குறைந்த போட்டிகளில் 50 வெற்றி

ஆப்கானிஸ்தான்  அணி சாதனை

சிம்பாப்வே அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குறைந்த இன்னிங்சில் 50 வெற்றியை ருசித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

பங்களாதேஷில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிப்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு 20க்கு20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

இதன்மூலம் குறைவான போட்டிகளில் 50 வெற்றியை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 72 போட்டிகளில் 50 வெற்றிகளை வெற்று சாதனை படைத்துள்ளது.

தென்ஆபிரிக்கா 83 போட்டிகளிலும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் 84 போட்டிகளிலும், இலங்கை 92 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 97 போட்டிகளிலும், நியூசிலாந்து 99 போட்டிகளிலும், இங்கிலாந்து 105 போட்டிகளிலும் 50 வெற்றிகளை பெற்றன.

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை