சந்திரயான்-2 : மாயமான விக்ரம் லேண்டர் ஓபிட்டரின் உதவியுடன் கண்டுபிடிப்பு

இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

சந்திரயான் -- 2: நிலவில் தரையிறக்கப்படும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட 'விக்ரம் லேண்டர்' நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக 'இஸ்ரோ' தலைவர் சிவன் தெரிவித்தார். எனினும் அதிலிருந்து இன்னும் சமிக்ைஞ (சிக்னல்) கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு நடந்த போது நிலவுக்கு மேல் 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் தொடர்பை இஸ்ரோ இழந்தது. இதனால் சந்திரயான்- 2 எதிர்பார்த்தபடி நிலவில்

இறங்கவில்லை. இதையடுத்து இந்திய நாடு ஏமாற்றமும் கவலையும் அடைந்தது. ஆனாலும் ஓபிட்டர் சாதனம் வெற்றிகரமாக நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது குறித்து ஓபிட்டர் கருவி புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது. எனினும் அதன் 'சிக்னல்' கிடைக்கவில்லை.

' அந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பில்தான் விழுந்துள்ளது. ஆனால் நிலவில் இறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் லேண்டர் இறங்கி இருக்கிறது. 2.1 கி.மீ. தூரத்தில் லேண்டர் இருந்த நிலையில் நிலவில் எடை 6-இல் ஒரு பங்கு இருக்கும் என்பதால் கீழே விழுந்த லேண்டர் எந்தவித சேதமும் அடைந்திருக்காது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனால் லேண்டரில் உள்ள ஏதாவது ஒரு கருவி மூலம் அதன் சிக்னலை திரும்பப் பெற இஸ்ரோ முயற்சித்து வருவதாக அதன் தலைவர் நேற்று தெரிவித்தார். விரைவில் ஓபிட்டர் அனுப்பிய லேண்டரின் புகைப்படங்களை வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தொடர்பு கொள்ள நிறைய முக்கிய வழிகள் இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் மோதி இருக்காது. ஒரு பரசூட் கட்டிய விமானி போல நிலவில் மிக மிக மெதுவாக அமைதியாக லேண்டர் இறங்கி இருக்க வாய்ப்புள்ளது. இதன் அர்த்தம் விக்ரம் லேண்டருக்கு எந்த விதமான சேதமும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

அதன்படி விக்ரம் லேண்டர் செங்குத்தான நிலையில் விழுந்திருந்தால், ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளது. அதேசமயம் விக்ரம் லேண்டர் கிடைமட்டமாக விழுந்து இருந்தால் ஆய்வுகளை தொடர முடியாது. அது விக்ரம் லேண்டரை சேதப்படுத்தி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இனிமேல் விக்ரம் லேண்டர் உடன் பின்வரும் விஷயங்களை செய்ய இஸ்ரோ முயலும். அதன்படி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு கட்டளைகள் அனுப்பப்படும். அதற்கு பதில் கிடைக்கிறதா என்று சோதிக்கப்படும். அதற்கு பதில் இல்லை என்றால் விக்ரமில் இருக்கும் அவசரகால மாற்று கருவிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்படும்.

அதுவும் வேலை செய்யவில்லை என்றால் நிலவை சுற்றி வரும் ஓபிட்டருக்கு கட்டளைகள் அனுப்பப்பட்டு, அந்த கட்டளைகளுக்கு விக்ரம் லேண்டர் பதில் அளிக்கிறதா என்று சோதிக்கப்படும். இதற்கும் விக்ரம் லேண்டர் பதில் அளிக்கவில்லை என்றால், அதற்கு உள்ளே இருக்கும் 'பிரக்யான் ரோவர்' உடன் தொடர்ப்பை ஏற்படுத்த முயல்வார்கள்.

பிரக்யான் ரோவர் சேதம் அடையாமல் இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதனுடன் தொடர்பு ஏற்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சி செய்வார்கள்.

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை